/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனவளக்கலை மன்ற தவ மைய துவக்க விழா
/
மனவளக்கலை மன்ற தவ மைய துவக்க விழா
ADDED : ஏப் 09, 2024 05:30 AM
திட்டக்குடி: திட்டக்குடி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், ஆவினங்குடியில் தவ மையம் திறப்பு விழா மற்றும் செயற்குழு கூட்டம் நடந்தது.
அறக்கட்டளை தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். விழுப்புரம் மண்டல விரிவாக்க இணை இயக்குனர் அருள்ஜோதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழுப்புரம் மண்டல தலைவர் விவேகானந்தன், மண்டல செயலாளர் வேல்முருகன், தங்கவேல் முன்னிலை வகித்தனர்.
அறக்கட்டளை செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார். ரகுபதி, மணிமாறன், பிரபாகரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பேராசிரியர்கள் ராஜரத்தினம், வாசுதேவன், பிச்சையம்மாள், பரிமளாதேவி, வைஷ்ணவிதேவி, தாட்சாயினி, ஜெயந்தி, சங் கீதப்ரியா உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் பாண்டியன் நன்றி கூறினார்.

