/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாடலி சிட்டி லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு
/
பாடலி சிட்டி லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஆக 13, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் பாடலி சிட்டி லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
கடலுார் செல்லங்குப்பம் லயன்ஸ் கிளப் கட்டட வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தலைவராக பார்த்தசாரதி, செயலாளராக உஷா மோகன், பொருளாளராக கோடீஸ்வரன் பதவி ஏற்றனர். சரவணன், வாசுதேவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
புதுச்சேரி மாநில என்.ஆர்., இலக்கியப் பேரவை தலைவர் தனசேகரன் சிறப்புரையாற்றினார். இதில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அப்போது, பாடலி சங்கர், உமாசங்கர், ரமேஷ் பிரபா, ராமஜெயம் பஸ் உரிமையாளர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். மோகன் நன்றி கூறினார்.

