/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சமுதாய சுகாதார வளாகம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
/
சமுதாய சுகாதார வளாகம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
ADDED : ஆக 09, 2024 04:57 AM

கடலுார்: கடலுார் அடுத்த காரணப்பட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் ரூ. 7.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய சுகாதார வளாகம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, சமுதாய சுகாதார வளாகத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பி.டி.ஓ.,க்கள் வீரமணி, பார்த்திபன், பொறி யாளர் கல்யாணி முன்னிலை வகித்தனர்.
இதை தொடர்ந்து, வினாயகபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையத்தை அய்யப்பன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
அப்போது, குடிமைப் பொருள் தாசில்தார் ஜெயக்குமார், சமூக நலத்துறை அலுவலர் கோமதி, ஊராட்சி தலைவர்கள் தமிழரசி பிரகாஷ், முத்துக் குமாரசாமி, அழகு மனோகர், பாலசுப்ரமணியம், குமார் துணைத் தலைவர் குப்பம்மாள், முன்னாள் நிலவள வங்கி தலைவர் ராமலிங்கம், வேலன் ஸ்டில்ஸ் வேலு, கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர், நிர்வாகிகள் பாஸ்கர், ஆறுமுகம், முருகவேல், விநாயகம், குமார், ஞானமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.