/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணாமலை பல்கலையில் உதவி மையம் திறப்பு
/
அண்ணாமலை பல்கலையில் உதவி மையம் திறப்பு
ADDED : மே 24, 2024 05:36 AM

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் மாணவர் உதவி மையத்தை துணைவேந்தர் கதிரேசன் துவக்கி வைத்தார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2024- - 2025ம் கல்வி ஆண்டிற்கான இணையவழி மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த 17ம் தேதி துவங்கியது. மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக பல்கலைகழத்தில் ''மாணவர் உதவி மையத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன், துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பதிவாளர் சிங்காரவேல், தேர்வு கட்டுப்பட்டு அதிகாரி பிரகாஷ், மாணவர் சேர்க்கை பிரிவு துணை இயக்குனர் பாலபாஸ்கர், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தினசம்பத், துணைவேந்தரின் தனிச் செயலர் பாக்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் மாணவர் சேர்க்கை விபரங்களை, www.annamalaiuniversity.ac.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.