ADDED : ஆக 16, 2024 11:05 PM
மந்தாரக்குப்பம்: என்.எல்.சி., சார்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது.
நெய்வேலி அடுத்த இந்திரா நகர் ஊராட்சி 'பி 2 பிளாக்' மாற்று குடியிருப்பு பகுதியில் என்.எல்.சி., சார்பில் புதிதாக துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.
கட்டடத்தை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
தொடர்ந்து வடக்குத்து ஊராட்சியில் உள்ள அண்ணா கிராமம் விரிவாக்கம், அசோக் நகர் 1 ஆகிய பகுதிகளில் 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு புதிய போர்வேல் அமைக்கும் பணியை எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் என்.எல்.சி., பொது மேலாளர் வெள்ளைச்சாமி, ஊராட்சி தலைவர்கள் அஞ்சலை குப்புசாமி, ராஜலட்சுமி கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர்கள் சடையப்பன், உமா ராமதாஸ், மருத்துவ அலுவலர் அகிலா, தி.மு.க., நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

