/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திரவுபதியம்மன் கோவில் திருப்பணி துவக்கம்
/
திரவுபதியம்மன் கோவில் திருப்பணி துவக்கம்
ADDED : செப் 08, 2024 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: கீழ்புவனகிரியில் திரவுபதியம்மன் கோவில் திருப்பணி துவங்கியதையடுத்து, பழைய கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
கீழ்புவனகிரியில் பழமையான திரபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுவர் உள்ளிட்ட பகுதியை சேதமடைந்தது. கோவிலை புதுப்பிக்க விழாக்குழு தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் தற்போது கோவில் கட்டும்பணியில் தீவிரம் செலுத்தி வருகின்றனர். முதற்கட்டமாக பாலாலயம் செய்து பழமையான விக்ரகங்கள், மூலவர் சிலைகள் இடமாற்றம் செய்தனர். மேலும் பழைய கோவில் சுவர் மற்றும் விமானம் உள்ளிட்டவைகள் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.