ADDED : ஆக 29, 2024 07:51 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் அணித் தலைவர்கள், துணைத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் பள்ளி தலைவர் சிவக்குமார், மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் தலைவர், துணைத் தலைவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், ஒருங்கிணைப்பாளர், சாரண மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
