ADDED : ஜூலை 19, 2026 07:13 PM
கடலுார்: கடலுாரில் உள்ள அரசு ஓய்வூதியர் சங்க கட்டடத்தில் மாவட்ட மொத்த மருந்து விற்பனை தொழிலாளர் பெடரேஷனின் மாதாந்திர கூட்டம் நடந்தது. சங்கத்தின் தலைவர் ரவி தலைமை தாங்கினார். செயலாளர் சுதாகர், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக மயூரா மெடிக்கல் உரிமையாளர் பிரகாஷ், இஸ்மாயில் மெடிக்கல் உரிமையாளர் கார்த்திகேயன், விநாயகா மெடிக்கல் உரிமையாளர் பழனியப்பன் ஆகியோர் பங்கேற்று பேசினர். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மொத்த மருந்து விற்பனை தொழிலாளர் பெடரேஷன் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு, கார்த்திகேயன் தனது சொந்த செலவில் ஊக்கத் தொகை வழங்கி பாராட்டினார். கூட்டத்தில் சங்கத்தின் எதிர்கால திட்டங்கள், சங்கத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
