/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீஸ் பற்றாக்குறையால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு
/
போலீஸ் பற்றாக்குறையால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு
போலீஸ் பற்றாக்குறையால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு
போலீஸ் பற்றாக்குறையால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு
ADDED : மே 24, 2024 05:24 AM
புவனகிரி: புவனகிரி மற்றும் மருதூர் போலீஸ் நிலையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
புவனகிரி, மருதுார் போலீஸ் நிலையங்கள் துவக்கப்பட்ட காலத்தில் அனுமதிக்கப்பட்ட போலீசார் மட்டும் தற்போது பணியில் உள்ளனர். ஆனால், அவர்களும் கடலூர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை பந்தோபஸ்து, கோர்ட் பணி என, சென்று விடுகின்றனர்.
இதனால், எஞ்சியுள்ள குறைந்த எண்ணிக்கையில் உள்ள போலீசாரால், போலீஸ் நிலையத்தில் வழக்கமான பணிகளையே மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது.
இதனால் பொதுமக்களின் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. பணியில் உள்ளவர்களுக்கு அரசு அறிவித்த வார விடுமுறை கிடைக்காமல் தொடர்ந்து பணியில் ஈடுபடுவதால் பலர் மன அழுத்தத்தில் உள்ளனர். குறைந்தளவில் போலீசார் உள்ளதால் தொடர் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
புவனகிரி அருகே சாத்தப்பாடி பகுதியில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால் அங்கு, புறக்காவல் நிலையம் துவங்கி தினசரி போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால், போலீஸ் பற்றாக்குறையால், நிரந்தரமாக புறக்காவல் நிலையம் மூடப்பட்டது.
எனவே, புவனகிரி, மருதுார் போலீஸ் நிலையங்களில் காலியாக உள்ள போலீசார் பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே, இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் குற்ற சம்பவங்கள், குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க முடியும்.
இதுகுறித்து எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.