/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குமராட்சி ஊராட்சியில் சுதந்திர தின விழா
/
குமராட்சி ஊராட்சியில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2024 11:22 PM

காட்டுமன்னார்கோவில்,: குமராட்சி ஊராட்சி அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், ஊராட்சி தலைவர் தேசிய கொடி ஏற்றினார்.
ஊராட்சி தலைவர் தமிழ்வாணன் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, காந்தி, அம்பேத்கர், அப்துல் கலாம் ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது.
துணைத் தலைவர் உமா மகேஸ்வரி, ஊராட்சி செயலாளர் சிலம்பரசன், ஒருங்கிணைப்பாளர் சிங்கராசு, முன்னாள் தலைமை ஆசிரியர் வரதராஜன், முன்னாள் கூட்டுறவு வங்கி செயலாளர் சாமிநாதன், முன்னாள் ஊராட்சி தலைவர் எழில்மதி இளஞ்செழியன், மணிவண்ணன், பேராசிரியர் குமரேசன், சமூக ஆர்வலர் திருமேனி, ராமசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

