/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்......
/
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்......
ADDED : ஜூலை 30, 2024 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து, இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட பொறுப்பு செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரை, துணை செயலாளர் குளோப், மாவட்ட நிர்வாகக்குழு முருகையன் உட்பட பலர் பங்கேற்றனர். அதில், மின் கட்டண உயர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
மின் வினியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் 2020ம் ஆண்டு மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
மாநில உரிமைகளை பறிக்கும் உதய் மின் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.