ADDED : ஜூன் 29, 2026 08:40 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் இந்திய கம்யூ.,கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட செயலாளர் துரை தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் நாகராஜ், துணை செயலாளர் மணிவண்ணன், வட்டக்குழு ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர்கள் சேகர், சுப்பிரமணி, பொருளாளர் பாஸ்கர், மாவட்ட நிர்வாகக்குழு சிவக்குமார், குணசேகரன் உட்பட பலர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தமிழக அரசு விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு பெட்ரோல், டீசல், காஸ் போன்றவற்றின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். 100 நாள் வேலை உறுதி திட்டத்தை மாற்றம் செய்யாமல் பழைய திட்டமே தொடர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
