/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விதிமுறைகளை பின்பற்ற கட்சியினருக்கு அறிவுறுத்தல்
/
விதிமுறைகளை பின்பற்ற கட்சியினருக்கு அறிவுறுத்தல்
UPDATED : மார் 22, 2024 12:33 PM
ADDED : மார் 22, 2024 12:33 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் அனைத்து அரசியல் கட்சியினருடன் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவதற்கான அறிவுறுத்தல் கூட்டம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் சேதுபதி தலைமை தாங்கி தேர்தல் விதிமுறைகள் பற்றி விளக்கினார். அ.தி.மு.க.,- தி.மு.க..- பா.ம.க.,- பா.ஜ., உள்ளிட்ட பல்வேறு அரசியில் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அரசியல் கட்சியினர் பொது இடங்களில் அனுமதி பெறாமல் பேனர் வைத்தல், சுவரொட்டி, சுவற்றில் எழுதுதல், போஸ்டர் உள்ளிட்டவைகள் ஒட்டுதல் கூடாது.
அரசியல் கட்சியின் சின்னங்களோ, அரசியல் தலைவர் உருவப்படங்களை பொது இடங்களில் ஒட்டுதல் கூடாது. தேர்தல் விதிமுறைகள் பின்பற்றி அரசியல் கூட்டங்கள், தெருமுனை பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறுவுறுத்தல் செய்யப்பட்டது.
சப் இன்ஸ்பெக்டர் சந்திரா நன்றி கூறினார்.

