/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி
/
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி
ADDED : மே 20, 2024 05:44 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராம மக்களுக்கு காளாண் வளர்ப்பு மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.
வேப்பூர் அடுத்த ஆவட்டி ஜெ.எஸ்.ஏ., வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவிகள், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி, ஊரக பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர்.
அவர்கள், தே.கோபுராபுரம் கிராமத்தில், காளாண் வளர்ப்பு மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தனர்.
மகளிர் சுயஉதவிக்குழு தலைவர் ஞானசவுந்தரி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் லட்சு மணன், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தட்சணா மூர்த்தி, சுந்தரவடிவு, திட்ட பொறுப்பாளர்கள் பிருந்தாதேவி, திவ்யா முன்னிலையில் உதவி பேராசிரியர் பிரித்விராஜ் பயிற்சி அளித்தார்.
வேளாண் மாணவிகள் சோபியா, சுவேகா, சிரஞ்சீவி வர்த்தனா, தமிழ்க்கவி, சவுமியா, விஜயலட்சுமி, சுகி, காவியா ஆகியோர் இனக்கவர்ச்சிப் பொறி, ஒளிப் பொறி ஆகியவற்றின் நன்மைகள் குறித்து விளக்கமளித்தனர்.
மேலும், காளாண் குடில் அமைத்தல், காளாண் படுக்கை முறை, அதன் மதிப்புக்கூட்டு பொருட்கள் குறித்து பயிற்சி தரப்பட்டது.

