/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு தீவிரம்
/
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு தீவிரம்
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு தீவிரம்
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு தீவிரம்
ADDED : மே 07, 2024 11:21 PM

விருத்தாசலம் : விருத்தாசலம் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருச்சி - சென்னை ரயில் மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், சரக்கு என தினசரி ஐம்பதுக்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. அதிகளவு ரயில் போக்குவரத்து காரணமாக ரயில் பாதையில் உள்ள இணைப்புகள், சிலீப்பர் கட்டைகள் ஆகியவற்றை மாதந்தோறும் பராமரிக்கும் பணி நடக்கிறது.
கடும் வெப்பம் காரணமாக ரயில்கள் செல்லும் போது, தண்டவாளங்கள் விரிவடைய வாய்ப்புள்ளது. இதனால் பழைய தண்டவாள பகுதிகளை அகற்றி, புதிதாக பொறுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அதன்படி, நாச்சியார்பேட்டை ரயில்வே கேட் அருகே திருச்சி மார்க்கமாக ரயில்கள் செல்லும் பகுதி, இணைப்பு ஆகியவற்றில் தண்டவாளங்களை பொருத்தும் பணியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.