/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு அயோடின் பரிசோதனை முகாம்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு அயோடின் பரிசோதனை முகாம்
ADDED : மார் 15, 2025 12:50 AM

திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு, அயோடின் பரிசோதனை முகாம் நடந்தது.
முகாமிற்கு, தலைமை ஆசிரியை வாசுகி தலைமை தாங்கினார். மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் திருமாவளவன் முன்னிலை வகித்தார். ஈ.கீரனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் ஆனந்தி, கணியன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பள்ளி மாணவர்களுக்கு தேசிய அயோடின் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் அயோடின் கலந்த உப்பு குறித்தும், அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களுக்கு அயோடின் பரிசோதனை செய்யப்பட்டது. மாணவர்களுக்கு நலக்கல்வி வழங்கப்பட்டது. அப்போது, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், மருந்தாளுநர் சரவணன், சுகாதார ஆய்வாளர் விஜயரங்கன், பகுதி சுகாதார செவிலியர் சக்தீஸ்வரி, லேப் டெக்னீஷியன் இளையராஜா, ஆசிரியர்கள் லதா, சுகுணா உட்பட பலர் பங்கேற்றனர்.