/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்
/
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கல்
ADDED : செப் 08, 2024 06:07 AM
காட்டுமன்னார்கோவில்: கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், காட்டுமன்னார்கோயில் கிழக்கு ஒன்றியதிற்கு உட்பட்ட குணவாசல், ஓமாம்புலியூர், செட்டித்தாங்கல் ஆகிய கிராமங்களில் அ.தி.மு.க., சார்பில் கட்சியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வாசு முருகையன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., மற்றும் மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன் பங்கேற்று, உறுப்பினர் அட்டை வழங்கினர்.
ஒன்றிய துணை செயலாளர் பாரதிதாசன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளர் இளந்தமிழன், ஒன்றிய பொருளாளர் சுரேஷ்குமார், லெனின், கிளை செயலாளர்கள் கவாஸ்கர், மணிபாரதி, இளங்கோவன்,கலியபெருமாள், தியாகராஜன், மல்லிகா மற்றும் பலர் பங்கேற்றனர்.