/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நுாறு சதவீத ஓட்டுப் பதிவு தேர்தல் பத்திரிகை வழங்கல்
/
நுாறு சதவீத ஓட்டுப் பதிவு தேர்தல் பத்திரிகை வழங்கல்
நுாறு சதவீத ஓட்டுப் பதிவு தேர்தல் பத்திரிகை வழங்கல்
நுாறு சதவீத ஓட்டுப் பதிவு தேர்தல் பத்திரிகை வழங்கல்
ADDED : மார் 29, 2024 05:38 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், ௧௦௦ சதவீதம் ஓட்டுபதிவை வலியுறுத்தி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வீடு, வீடாக வாக்காளர்களிடம், தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்கு, தேர்தல் திருவிழா பத்திரிகை வழங்கி அழைப்பு விடுத்தனர்.
தமிழகத்தில், லோக்சபா தேர்தல் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, கடலுார் மாவட்டத்தில் நுாறு சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி வாக்காளர்கள், பொதுமக்களிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி சார்பில், ரேவ் மெயின்ரோடு பகுதியில் செயல் அலுவலர் திருமூர்த்தி தலைமையில், ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களிடம், தாம்புல தட்டில் தேர்தல் திருவிழா பத்திரிக்கை மற்றும் வெற்றிலை பாக்கு வைத்து, ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடக்கும் லேக்சபா தேர்தலில் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நிகழ்ச்சியில், துப்புரவு ஆய்வாளர் ஜோதி, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் செல்வகுமார், இளநிலை உதவியாளர் கவிலயா, அலி அப்பாஸ் மற்றும் டெங்கு பணியாளர்கள், பரப்புரையாளர்கள் பங்கேற்றனர்.

