/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., காப்பீடு சான்று வழங்கல்
/
நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., காப்பீடு சான்று வழங்கல்
நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., காப்பீடு சான்று வழங்கல்
நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., காப்பீடு சான்று வழங்கல்
ADDED : மே 26, 2024 05:44 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகாட்சி ஒப்பந்த துாய்மைப் பணியாளர்களுக்கு 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக இ.எஸ்.ஐ., மருத்துவ காப்பீடு சான்று வழங்கப்பட்டது.
நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் குப்பை அகற்றும் பணியை செய்ய தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளத. அந்த ஒப்பந்ததாரர் மூலம் தினமும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணியை மேற்கொள்கின்றனர். ஒப்பந்த துாய்மைப் பணியாளர்களுக்கு கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததால் வெறும் கையுடன் குப்பையை எடுப்பது, கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்வது போன்ற பணிகளை செய்வதால் நோய் பாதிக்கும் நிலையில் உள்ளனர்.
மேலும் இந்த பணியாளர்களுக்கு பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி தொகை பல லட்சம் ரூபாயை அந்த துறைக்கு நகராட்சி பல ஆண்டுகளாக செலுத்தாமல் இருந்தது. நீண்ட போராட்டத்திற்குப்பின், ஒரு பகுதியை செலுத்தினர். அதேபோல் தொழிலாளர்கள் மருத்துவ வசதிக்காக இ.எஸ்.ஐ., காப்பீடாக மாதம் தோறும் பணம் பிடித்தம் செய்கின்றனர். ஆனால், இதுவரை அதற்கான சான்றுகளை பணியாளர்களுக்கு வழங்கவில்லை. இதுகுறித்து தெரியாமலேயே துப்புரவு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் இலவசமாக கிடைக்கும் மருத்துவ வசதி உள்ளிட்ட சலுகைகளைக் கூட அவர்கள் பெற முடியவில்லை என 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
அதனைத் தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன் உத்தரவின்பேரில் ஒப்பந்ததாரர் நேற்று அனைத்து ஒப்பந்த பணியாளர்களுக்கும் இ.எஸ்.ஐ., காப்பீடு சான்றுகளை வழங்கினார். இதனால், துப்புரவு பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.