/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய போர்வெல் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் அவலம்
/
புதிய போர்வெல் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் அவலம்
புதிய போர்வெல் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் அவலம்
புதிய போர்வெல் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் அவலம்
ADDED : ஜூலை 01, 2024 06:24 AM

நடுவீரப்பட்டு : பத்திரக்கோட்டையில் லட்சணக்கணக்கில் செலவில் போடப்பட்ட போர்வெல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.
பண்ருட்டி ஒன்றியம் சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சியை சேர்ந்த கிராமம் பத்திரக்கோட்டை.இந்த கிராமத்தில் குறிஞ்சிப்பாடி-நடுவீரப்பட்டு சாலையில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டிற்கு கனிமவள நிதியில் கடந்த ஆண்டு புதியபோர்வெல் போடப்பட்டது.இந்த போர்வெல்லில் மோட்டார் இறக்காமல் உள்ளது. இதுகுறித்து கடந்த மாதம் நடந்த ஜமாபந்தியில் பொதுமக்கள் சார்பில் மனுகொடுக்கப்பட்டும் எவ்வித பலனும் இல்லை.
இந்த இடம் தனிநபர் ஒருவர் உரிமை கொண்டாடியதால் பண்ருட்டி தாசில்தாருக்கு பரிந்துரை செய்யப்பட்டு இடம் சம்மந்தமாக உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்திரவிட்டனர்.
ஆனால் வருவாய்த்துறை அலட்சியத்தால் போர்வெல் வீணாகி வருகிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.