/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெயப்பிரியா பள்ளி சிலம்ப மாணவர்கள் சாதனை நிகழ்ச்சி
/
ஜெயப்பிரியா பள்ளி சிலம்ப மாணவர்கள் சாதனை நிகழ்ச்சி
ஜெயப்பிரியா பள்ளி சிலம்ப மாணவர்கள் சாதனை நிகழ்ச்சி
ஜெயப்பிரியா பள்ளி சிலம்ப மாணவர்கள் சாதனை நிகழ்ச்சி
ADDED : மார் 07, 2025 07:06 AM

மந்தாரக்குப்பம், : ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி சிலம்ப மாணவர்கள் உலக சாதனை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில், தமிழர் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும், பெண்களுக்கு தற்காப்பு கலை அவசியம் என்பதை வலியுறுத்தியும், 'வீர தீரா 2025' என்ற உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 550 க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவர்கள் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கு ஜெயப்பிரியா வித்யாலயா கல்வி குழும தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். பள்ளி கல்விகுழும இயக்குநர் தினேஷ் முன்னிலை வகித்தார்.
திட்டக்குடி டி.எஸ்.பி., மோகன், விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தனர்.
தமிழ்நாடு சிலம்பாட்ட கழக மாவட்ட செயலாளர் கலைச்செழியன், இன்ஸ்பெக்டர் சசிகலா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முருகேசன், பிரான்சிஸ் முதல்வர்கள், நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு உலக சாதனை அமைப்பின் சேர்மன் கார்த்திக்குமார் மற்றும் நிர்வாக இயக்குநர் மோனிகா ரோஷினி, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதன்மை நிர்வாக அலுவலர் ராமன் குமாரமங்கலம், ஒருங்கிணைப்பாளர் சூர்யா கண்ணன் செய்திருந்தனர்