ADDED : பிப் 27, 2025 06:37 AM

விருத்தாசலம்; விருத்தாசலம் ஸ்டேட் பாங்க் அருகே, அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நகர செயலர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாநில ஜெ., பேரவை துணை செயலர் அருள் அழகன், மாவட்ட துணை செயலர் ரவிச்சந்திரன், நகர துணை செயலர் அரங்க மணிவண்ணன், உமா மகேஸ்வரன், ஒன்றிய செயலர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். புதிய நிர்வாகிகள் ராஜேந்திரன், திருப்பதி, சோமு, அருள், செந்தில், சக்திபாலன், ராமச்சந்திரன், துரை ராஜேந்திரன், லோகேஷ், குணா, சாமி, வெங்கடேசன், தமிழ்ச்செல்வன், ரஞ்சிதம் மற்றும் நிர்வாகிகள் செல்வகணபதி, பாஸ்கரன், லோகநாதன், சத்யா செல்வம், பக்ருதீன், மதியழகன், சுகந்தன், சுரேஷ், மணிகண்டன், வேலு, கார்த்தி, ஜெயராமன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.