ADDED : மார் 11, 2025 05:53 AM

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த எள்ளேரி கிராமத்தில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வாசு முருகையன், சிவக்குமார் , ஜோதி பிரகாஷ், நவநீதகிருஷ்ணன், சுந்தரமூர்த்தி, நகர செயலாளர்கள் எம். ஜி. ஆர்., தாசன், பூமாலை கேசவன், சங்கர், துணை செயலாளர் அரிசக்திவேல் முன்னிலை வகித்தனர். எள்ளேரி பிரபு வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் ஜெயபால், முன்னாள் எம்,பி., முத்துமணி, மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., மாநில அமைப்புச் செயலாளர் முருகுமாறன், தலைமைக் கழக பேச்சாளர் வீரபெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், சேலைகள், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் கலைமணி, ஜெ.,பேரவை துணைச் செயலாளர் பாலமுருகன், துணைச் செயலாளர் கோதை வசந்தகுமார், குணசேகரன், செந்தில்குமார், மணிகண்டன், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
கோவிந்தராசு நன்றி கூறினார்.