/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதையில் குழந்தை தொழிலாளர்கள் செங்கல் சூளைகளில் நீதிபதி ஆய்வு
/
விருதையில் குழந்தை தொழிலாளர்கள் செங்கல் சூளைகளில் நீதிபதி ஆய்வு
விருதையில் குழந்தை தொழிலாளர்கள் செங்கல் சூளைகளில் நீதிபதி ஆய்வு
விருதையில் குழந்தை தொழிலாளர்கள் செங்கல் சூளைகளில் நீதிபதி ஆய்வு
ADDED : ஆக 28, 2024 05:13 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதி யில் உள்ள செங்கல் சூளைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் உள்ளனரா என நீதிபதி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் இயங்கும் செங்கல் சூளைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் 18 வயது நிரம்பாத வளர் இளம் பருவ தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக புகார் எழுந்தது.
அதனையொட்டி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழு செயலரான கடலுார் சார்பு நீதிபதி அன்வர் சதத் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
அதில், ஸ்ரீமுஷ்ணம் தாலுகா கார்மாங்குடி, வல்லியம் கிராமங்களில் இயங்கும் ஐந்து செங்கல் சூளைகளில் குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமை தொழிலாளர்கள் உள்ளனரா என விசாரித்தனர். தொடர்ந்து, தொழிலாளர்களிடம் ஊதியம், உணவு முறை மற்றும் உரிமையாளர்கள் மூலம் ஏதேனும் மிரட்டல் வருகிறதா என கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, கருவேப்பிலங்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில், டூவீலர் ஒர்க் ஷாப், டிஜிட்டல் பிரிண்டிங் கடைகளில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர்கள் இருவரை மீட்டனர்.
உரிமையாளர்கள் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.
தொழிலாளர் நல உதவி ஆணையர் ஞானப்பிரகாசம், ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், தாசில்தார்கள் உதயகுமார், சேகர், தொழிலாளர் நல துறையினர், போலீசார் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் உடனிருந்தனர்.

