/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கே.பஞ்சங்குப்பத்தில் நிழற்குடைக்கு பூமி பூஜை
/
கே.பஞ்சங்குப்பத்தில் நிழற்குடைக்கு பூமி பூஜை
ADDED : மார் 13, 2025 12:22 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த கே.பஞ்சங்குப்பத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5.50 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை கட்ட பூமி பூஜை நடந்தது.
பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ரங்கசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், ஊராட்சி துணை தலைவர் விஜயராஜா முன்னிலை வகித்தனர். பாண்டியன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், ரவி, பாஸ்கர், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், இளைஞரணி செயலாளர் சங்கர், முன்னாள் ஊராட்சி தலைவர் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.