ADDED : ஜூலை 16, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கி, காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா, உதவி தலைமை ஆசிரியர் பாத்தாகான், ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி சோரடியா ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர்.
காமராஜர் காட்டிய நேர்மையான வழியில் பயின்று, நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என, மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். ஏற்பாடுகளை சித்ரா செய்திருந்தார்.
