/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லட்சுமி சோரடியா பள்ளியில் காமராஜர் பிறந்த நாள்
/
லட்சுமி சோரடியா பள்ளியில் காமராஜர் பிறந்த நாள்
ADDED : ஜூலை 16, 2024 11:31 PM

கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் லட்சுமி சோரடியா நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கினார். ஜெயந்தி சோரடியா துவக்கி வைத்தார்.
பள்ளி முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா வரவேற்றார்.
ஐந்தாம் உலக தமிழ் சங்க நிறுவனர் முத்துக்குமரனார், பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். கவிஞர் சீனுசெந்தாமரைக்கண்ணன் வாழ்த்துரை வழங்கினார்.
பள்ளி துணை ஒருங்கிணைப்பாளர் சித்ரா, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் பத்தாகான் நன்றி கூறினார்.