நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூரில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிப்பாட்டு மன்றத்தின் 20ம் ஆண்டு கஞ்சி கலயம் மற்றும் தீச்சட்டி ஊர்வலம் நடந்தது.
ஊர்வத்தை, மன்றத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் உத்திராபதி துவக்கி வைத்தார். வழிப்பாட்டு மன்ற தலைவர் பொன்மொழி, மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், செல்வி, கோமகள்தேவி, கனகரத்தினம், சீமாதிபதி, ராதாகிருஜ்ணன், ஆண்டாள், செந்தமிழ்செல்வி, கவிதா, அஞ்சலாட்சி முன்னிலை வகித்தனர்.
செவ்வாடை அணிந்து பெண்கள் கஞ்சி கலயம், தீ்ச்சட்டி ஏந்தி வழிபாட்டு மன்றத்திலிருந்து புறப்பட்டு முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலம் வந்தனர்.
மதுமிதா, லாவண்யா, சக்தி, சக்திமகேந்திரன், ஆனந்தி, சரசு, மகாலட்சுமி, வசந்தா, அஞ்சலையம்மாள், வளர்மதி, சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

