/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கருணாநிதி நுாற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு
/
கருணாநிதி நுாற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு
கருணாநிதி நுாற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு
கருணாநிதி நுாற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு
ADDED : ஆக 12, 2024 05:45 AM

கடலுார்: கருணாநிதி நுாற்றாண்டு விழாவை மாவட்டம் முழுவதும் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் காட்டுமன்னார்கோவில் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடந்தது.
தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.
ஐயப்பன் எம்.எல்.ஏ., பொறியாளர் அணி செயலாளர் துரை சரவணன், இளைஞரணி துணை செயலாளர் அப்துல்மாலிக், மாவட்ட கழக பொருளாளர் கதிரவன், மேயர் சுந்தரி ராஜா, மகளிர் அணி அமுதாராணி, மகளிர் தொண்டரணி மனோரஞ்சிதம், முன்னிலை வகித்தனர். கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழாவினை மாவட்டம் முழுவதும் மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகங்களில் நலத்திட்ட உதவிகள் செய்து கொடியேற்றி கொண்டாட வேண்டும்.
விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஆணைப்படி இளைஞரணி சார்பில் கருணாநிதியின் நுாற்றாண்டு நிறைவு நிகழ்வின் முத்தாய்ப்பாக பேச்சுப்போட்டி நடத்திடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.