ADDED : ஏப் 26, 2024 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் அடுத்த மஞ்சக் கொள்ளை தண்டாயுதபாணி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி காவடி பூஜை நடந்தது.
விழா, கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும், சிறப்பு பூஜை மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. 23ம் தேதி சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. பெண்கள் பால் குடம் எடுத்து, காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தொடர்ந்து நேற்று முன்தினம் 25ம் தேதி இடும்பன், கடம்பன் விழா காவடி பூஜை நடந்தது.
ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளையினர் மற்றும் கிராம மக்கள்செய்திருந்தனர்.

