/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சென்னையில் இளம்பெண் கடத்தல் கடலுாரில் போலீசார் அதிரடி சோதனை
/
சென்னையில் இளம்பெண் கடத்தல் கடலுாரில் போலீசார் அதிரடி சோதனை
சென்னையில் இளம்பெண் கடத்தல் கடலுாரில் போலீசார் அதிரடி சோதனை
சென்னையில் இளம்பெண் கடத்தல் கடலுாரில் போலீசார் அதிரடி சோதனை
ADDED : மே 26, 2024 04:59 AM

கடலுார்: சென்னையில் இளம் பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கடலுாரில் போலீசார் அதிரடியாக வாகன சோதனை மேற்கொண்டனர்.
சென்னை, வேளச்சேரியை சேர்ந்த 20 வயது இளம்பெண் காரில் கிழக்கு கடற்கரை சாலையில் கடத்திச் செல்வதாக நேற்று காலை கடலுார் எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் வந்தது.
அதனைத் தொடர்ந்து எஸ்.பி., ராஜாராம் உத்தரவின்பேரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலுார் மாவட்டத்திற்கு வரும் அனைத்து சாலைகளிலும் வரும் கார்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
கடலுார் ஆல்பேட்டை செக்போஸ்டில், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதே போன்று, சாவடி உள்ளிட்ட பகுதிகளில் கார்களை மட்டும் நிறுத்தி சோதனை செய்தனர்.
இந்நிலையில் மதியம், விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் அருகே கார் பிடிபட்டதை தொடர்ந்து கார் சோதனையை போலீசார் கைவிட்டனர்.