ADDED : ஏப் 26, 2024 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் மகன் குமார், 49; இவர், மெயின் ரோட்டில், தனது வாகனத்தில் அமர்ந்தபடி மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் சீனு என்கிற தமிழ்ச்செல்வன், 21; குமாரிடம், மது அறுந்த பணம் கொடு என கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது பாக்கெட்டில் இருந்த 2,000 ரூபாய் மற்றும் மொபல் போனையும் பறித்துக் கொண்டு தப்பியோடினார்.
குமார் அளித்த புகாரின் பேரின், சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து, சீனுவை கைது செய்தனர்.

