/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணசாமி பள்ளி மாணவர்கள் சாதனை
/
கிருஷ்ணசாமி பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : மே 07, 2024 04:36 AM

கடலுார் : கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய 364 மாணவர்களில், 362 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி காருண்யா 583 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம், ஆகாஷ் 573 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி சம்யுக்தா 570 பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார்.
550 மதிப்பெண்களுக்குமேல் 19 மாணவர்கள், 525 மதிப்பெண்களுக்குமேல் 52 மாணவர்கள், 500 மதிப்பெண்களுக்குமேல் 71 மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாணவி பிரீத்திகுமாரி கணக்குப்பதிவியல் மற்றும் பிரெஞ்ச் பாடத்திலும், மாணவர் வசந்தன் கணினி அறிவியல் பாடம், மாணவி ஜெயவர்ஷினி பிரெஞ்ச் பாடத்திலும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பள்ளி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன், முதலிடம் பிடித்த மாணவிக்கு ஐந்தாயிரம் ரூபாய், இரண்டாமிடம் பிடித்த மாணவருக்கு மூன்றாயிரம் மற்றும் மூன்றாமிடம் பிடித்த மாணவிக்கு இரண்டாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கினார். பள்ளி முதன்மை இயக்குனர் சிரிஷா கண்ணன் மற்றும் டாக்டர் கண்ணன் ஆகியோர் பள்ளி ஆசிரியர்களை பாராட்டினர்.
பள்ளி முதல்வர் நடராஜன் நன்றி கூறினார்.