/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அட்சயாமந்திர் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
/
அட்சயாமந்திர் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 12, 2024 05:26 AM

பரங்கிப்பேட்டை: பு.முட்லுார் அட்சயாமந்திர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
பு.முட்லுார் அட்சயாமந்திர் மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவி சிவ அனுக்கிரஹா, 489 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். அட்சயா, 480, கீர்த்தனா, 480 பெற்று இரண்டாமிடம், அர்ச்சனா 478 பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
450 மதிப்பெண்களுக்கு மேல் 27 பேர், 400க்கு மேல் 56 மாணவர்கள் இடம் பிடித்தனர். மேலும், கணிதம் பாடத்தில் 16 மாணவர்கள், அறிவியலில் 8 பேர், சமூக அறிவியலில் நான்கு மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். தமிழில் 5 மாணவர்கள் 99 மதிப்பெண்கள் பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடத்தப்பட்டது. தாளாளர் புருஷோத்தமன் மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.