/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணசாமி எக்சலன்ஸ் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
/
கிருஷ்ணசாமி எக்சலன்ஸ் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
ADDED : மே 07, 2024 04:04 AM

கடலுார், : கடலுார் அடுத்த எஸ்.குமாரபுரம் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆப் எக்சலன்ஸ் பள்ளியில் மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளனர்.
பள்ளியில் 124 பேர் தேர்வு எழுதினர். இப்பள்ளி அளவில் மாணவிகள் சாய் பூஜா 566 மதிப்பெண் பெற்று முதலிடம், ேஹமவர்த்தினி 563 பெற்று இரண்டாமிடம், கோபிகா 556 பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர். மாணவி ஜைனப் அப்ரின் வணிகவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றார். 84 மாணவர்கள் சிறப்பிடமும், 112 மாணவர்கள் முதல் வகுப்பிலும், 97 மாணவர்கள் பல்வேறு பாடவாரியாக 90க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பள்ளித் தாளாளர் ராஜேந்திரன், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு முறையே 5,000 ரூபாய், 3,000, 2,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பள்ளியின் முதன்மை இயக்குனர் சிரிஷா கண்ணன், கண்ணன் ஆகியோர் பாராட்டினர். பள்ளி முதல்வர் சாந்தி பாண்டியன், ஒருங்கிணைப்பாளர்கள் மாலா நடராஜன், முத்துக்கிருஷ்ணன் உடனிருந்தனர்.