/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முஸ்தபா மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
முஸ்தபா மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 12, 2024 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் முஸ்தபா பள்ளி, பத்தாம் வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளி அளவில், மாணவி இஸ்மா பேகம் 488 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்திலும், சுஹைனா பைரோஸ் 473 பெற்று இரண்டாமிடம், வர்ஷினி 472 பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். 400 மதிப்பெண்களுக்கு மேல் 30 மாணவர்கள் , நூருல் ஆயிஷா, சமீரா பேகம் ஆகியோர் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் அன்வர் அலி சால்வை அணிவித்து பாராட்டினார். தலைமை ஆசிரியர் சக்திவேல், உதவி தலைமை ஆசிரியர் ஞானவேல் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மாணவர்களை வாழ்த்தினர்.