/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரத்தனா மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
ரத்தனா மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 12, 2024 05:32 AM

பண்ருட்டி: பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 98 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
பள்ளி அளவில் மாணவி லாவண்யா 489 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். மாணவன் சுதர்சனன் 488 பெற்று 2 ம் இடம், வைஷ்ணவி 485 பெற்று 3ம் இடம் பிடித்தனர்.
மாணவி கோபிகா 481 மதிப்பெண், தையல்நாயகி, சகீனாபேகம் இருவரும் 477 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
450 மதிப்பெண்ணிற்கு மேல் 12 பேர், 40௦க்கு மேல் 35 பேர் பெற்றனர்.
கணித பாடத்தில் ௪ மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களும், மொழிப்படங்களில் இரு மாணவிகள் 100க்கு 99 மதிப்பெண்கள் பெற்றனர்.
பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றிக்கு உதவிய ஆசிரியர்களை பள்ளி நிறுவனர் மாயகிருஷ்ணன், தாளாளர் ராமகிருஷ்ணன், பள்ளி முதல்வர் ரவி, இயக்குனர்கள் தேவநாதன்,பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.