/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிரசன்னராமாபுரத்தில் நாளை கும்பாபிேஷகம்
/
பிரசன்னராமாபுரத்தில் நாளை கும்பாபிேஷகம்
ADDED : மே 17, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி தாலுகா,மருதூர் அருகே பிரசன்னராமாபுரம் கிராமத்தில் வரசக்தி விநாயகர், முருகன், மாரியம்மன், ரீ ஐயனாரப்பன், செல்லியம்மன் கோவில்களில் நாளை (19ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேக பூஜைகள் நேற்று துவங்கியது.
கும்பாபிஷேக தினமான நாளை (19ம் தேதி) காலை 5:00 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து பல்வேறு பூஜைகளுக்கு பின் காலை 7.00 மணிக்கு கடம் புறப்பாடு துவக்கி, ஐந்து கோவில்களில் கோபுர கலசங்கங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

