நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி, : திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியில் ஞான செல்வ ஆழ்வார் கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி கிராமத்தில் ஞான செல்வ ஆழ்வார் கணபதி கோவில் கும்பாபிஷேக விழா பூஜைகள், 24ம் தேதி துவங்கியது. 25ம் தேதி முதல்கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால பூஜை, கோபூஜை, திரவியஹோமம் நடந்தது. தொடர்ந்து, கடம் புறப்பாடாகி, கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஆவினங்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.