நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்: கும்பாபிஷேக விழா கடந்த 28ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 29ம் தேதி காலை வாஸ்து சாந்தி, சங்கல்பம், தீபாராதனை நடந்தது. அன்று மாலை 4:30 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜை தொடங்கியது.
கும்பாபிஷேக நாளான நேற்று காலை கோ - பூஜை, 8:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது.
தொடர்ந்து கடம் புறப்பட்டது. கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. 9:30 மணிக்கு காளியம்மனுக்கு மகா அபிஷேகம் மகா தீபாரதனை நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் மகளிர் குழுவினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.