
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : வையங்குடி பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷகம் நடந்தது.
திட்டக்குடி அடுத்த வையங்குடி கிராமத்தில் லோகநாயகி உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் பழமை வாய்ந்தது. பல ஆண்டுகளுக்குப்பிறகு இக்கோவிலில் உள்ள பசுபதீஸ்வரர், லோகநாயகி, நந்தி, அர்த்த மண்டபம், விமானம், விநாயகர், தென்முகப்பரமன், அண்ணாமலையார், பிரம்மா, கொற்றவை, நாகர் ஆகிய சன்னதிகளுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
அதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை 8.30மணிக்கு விமானங்கள் மற்றும் மூலவர் மூர்த்திகளுக்கு தமிழ் முறைப்படி திருமறைகள் ஓதி, கும்பாபிஷேக விழா நடந்தது. ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

