/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிரம்மதேவர் கோவிலில் கும்பாபிஷேகம்
/
பிரம்மதேவர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 29, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் ஆணையாங்குப்பம் கிராமத்தில் உள்ள மஹா கைலாயத்தில் பிரம்மதேவர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
அதையொட்டி, கடந்த 26ம் தேதி முதல் கால பூஜையும், 27ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜையும் நடந்தது.
கும்பாபிஷேகம் தினமான நேற்று நான்காம் கால பூஜை நடந்தது.
தொடர்ந்து, கடம் புறப்பாடாகி காலை7;00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகத்தில், சுவாமி ஓங்காரநந்தா, ஞானேஸ்வரி, மஹாகைலாயம் துணைத் தலைவர் குமார்ராகவன், சுவாமிகோடீஸ்வரானந்தா மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.