/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிள்ளை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
கிள்ளை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 04, 2024 06:29 AM

கிள்ளை : கிள்ளையில், விநாயகர், குளூந்தாளம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேக பூஜைகள் கடந்த 30ம் தேதி துவங்கியது. கும்பாபிஷேக தினமான நேற்று நான்காம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, கடம் புறப்பாடாகி காலை 11;:00 மணிக்கு, கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.
விழாவில் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், அகஸ்தியம் அறக்கட்டளை தலைவர் ஈஸ்வர் ராஜலிங்கம், தொழிலதிபர் சசிகுமார், மீனவர் நலவாரிய சத்தியமூர்த்தி, கொள்ளிடம் சேர்மன் ஜெயபிரகாஷ் மற்றும் கிராம நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
கிராம தலைவர் அரங்கநாயகம், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் செங்குட்டுவன், அ.தி.மு.க., நகர ் தலைவர் வீரசேகர், நகர செயலாளர் தமிழரசன், காங்., தலைவர் வேல்முருகன், தி.மு.க., தலைவர் கமலதாசன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

