
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அடுத்த சித்தரசூரில் உள்ள பழமையான விநாயகர், திரவுபதி அம்மன், நவசக்தி மாரியம்மன், பொன்னியம்மன் கோவில்களில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் கணபதி, நவகிரக, லட்சுமி ஹோமங்களுடன், யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று காலை யாகசாலை பூஜைகளும் பூர்ணாஹூதி தீபாராதனையும் நடந்தது. கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து அனைத்து கோவில்களின் கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானமும் வழங்கினர்.