/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விநாயகர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
/
விநாயகர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : ஆக 18, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார், பாதிரிக்குப்பம் நவசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
கடலுார், பாதிரிக்குப்பம் நவசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், முதல் கால யாக பூஜைகள் நடந்தது.நேற்று இரண்டாம் கால யாக பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை, மூலமந்திர ேஹாமம், மூன்றாம் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.
இன்று (19ம் தேதி) காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், 9:00 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடாகி 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

