/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடுவீரப்பட்டு கோவிலில் 15ல் கும்பாபிஷேகம்
/
நடுவீரப்பட்டு கோவிலில் 15ல் கும்பாபிஷேகம்
ADDED : செப் 13, 2024 07:15 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவில், முத்துமாரியம்மன் கோவில் மற்றும் புதிய ராஜகோபுர கும்பாபிஷேகம் வரும் 15 ம் தேதி நடக்கிறது.
கோவிலில் பூஜைகள் கடந்த 10ம் தேதி துவங்கியது. நேற்று காலை 11:00 மணிக்கு விசேஷசாந்தியும், மாலை 5:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கும்பலங்காரமும், இரவு முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. கும்பாபிேஷக தினமான 15ம் தேதி காலை 5:00 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து, யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து 7:45 மணிக்கு முத்துமாரியம்மன் கோவில் ராஜகோபுரம், மூலவர் கோபுர கும்பாபிஷேகம் நடக்கிறது.
10:30 மணிக்கு காமாட்சியம்மன், கைலாசநாதர் ராஜகோபுரம், மூலவர் கோபுரம் கும்பாபிஷேகம் நடக்கிறது. 10:45 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம், திருப்பணிக்குழு தலைவர் ராஜாமணி தலைமையிலான குழுவினர்கள் செய்து வருகின்றனர்.

