கடலுார்: கடலுார் பாதிரிக்குப்பம் நவசித்தி விநாயகர் கோவிலில், கும்பாபிேஷக விழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 17ம் தேதி மாலை 5:00 மணியளவில் முதல் கால யாகசாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை, நவசித்தி விநாயகருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று காலை 7:00 மணியளவில் 4ம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து, கடம்புறப்பாடாகி 9:30 மணியளவில் கோவில் விமான கலசத்திற்கு கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம்
தில்லை நகரில் உள்ள ஸ்ரீ வெற்றி விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் காலை 5:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜையும், மாலை 6:30 மணியளவில் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று கும்பாபிஷேகத்தையொட்டி, காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து, 9:30 மணிக்கு கடம் புறப்பாடாகி 10:00 மணியளவில், கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.