/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொடர் குற்ற சம்பவங்கள் 3 பேருக்கு 'குண்டாஸ்'
/
தொடர் குற்ற சம்பவங்கள் 3 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : செப் 11, 2024 01:51 AM

கடலுார் : தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள நடுவீரப்பட்டு போலீசார் கடந்த மாதம் 9ம் தேதி வன்னியர்பாளையம் ஏரிக்கரை அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, மாருதி கார் மற்றும் பைக்கை நிறுத்தி சோதனை செய்ததில் 1 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.
இதுதொடர்பாக கடலுார், கே.என்.பேட்டையை சேர்ந்த முருகன் மகன் கவியரசன், 24; ராஜகுமாரன் மகன் பாம்ராஜ் (எ) ராஜேஷ், 26; நடுவீரப்பட்டு தனுஷ் மகன் சாய்குமார், 24; உட்பட 5 பேரை கைது செய்தனர்.
இதில், பாம்ராஜ் மீது கொலை உள்ளிட்ட 3 வழக்குகள், கவியரசன் மீது 2 கஞ்சா உள்ளிட்ட 3 வழக்குகள், சாய்குமார் மீது 3 கஞ்சா வழக்குகள் உள்ளன.
மூவரின் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ராஜாராம், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாருக்கு பரிந்துரை செய்தார்.
அதையேற்று, கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரிடமும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை போலீசார் நேற்று வழங்கினர்.