/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.2 லட்சம் குட்கா பதுக்கிய வியாபாரிக்கு 'குண்டாஸ்'
/
ரூ.2 லட்சம் குட்கா பதுக்கிய வியாபாரிக்கு 'குண்டாஸ்'
ரூ.2 லட்சம் குட்கா பதுக்கிய வியாபாரிக்கு 'குண்டாஸ்'
ரூ.2 லட்சம் குட்கா பதுக்கிய வியாபாரிக்கு 'குண்டாஸ்'
ADDED : ஏப் 25, 2024 11:07 PM

விருத்தாசலம்: விருத்தாசலம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஜாபர் அலி மகன் மன்சூர் அலி, 38; இவர் குட்கா பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து, பதுக்கி வைத்து விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் மன்சூர் அலி மற்றும் குட்கா வாங்க வந்த துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், பாலகிருஷ்ணன் மகன் காசி பாண்டியன், 36; ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 200 கிலோ எடையில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறி முதல் செய்து கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மன்சூர் அலியை குண்டர் சட்டத்தில் கைது செய்திட எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையின் பேரில், கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.
இதற்கான ஆணையை கடலுார் மத்திய சிறையில் உள்ள மன்சூர் அலியிடம் போலீசார் வழங்கினர்.