/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லட்சுமி சோரடியா பள்ளி கராத்தே போட்டியில் வெற்றி
/
லட்சுமி சோரடியா பள்ளி கராத்தே போட்டியில் வெற்றி
ADDED : ஆக 29, 2024 07:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா பள்ளியில் கராத்தே மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
சென்னையில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில், கடலுார் ஸ்ரீலட்சுமி சோரடியா பள்ளியின் 6ம் வகுப்பு மாணவர் சாய்ராம், லட்சுமி சோரடியா பள்ளியின்7ம் வகுப்பு மாணவர் சபரிஷ், 9ம் வகுப்பு மாணவி அக்ஷயா சன், பிளஸ் 1 மாணவர் சூர்யகுமார் ஆகியோர் முதல் நான்கு இடங்களை பிடித்தனர். மேலும், 2ம் வகுப்பு மாணவி கர்ஷிகா சிலம்பம் போட்டியில் 3ம் இடம் பிடித்தார்.
இவர்களுக்கு பள்ளி வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவில் தாளாளர் மாவீர்மல் சோரடியா சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

